ஆல் இன் ஆல் திடீர் நீக்கம்!!!

31st of October 2013
சென்னை::கார்த்திக், காஜல் அகர்வால் சந்தானம் நடித்துள்ள படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. ராஜேஷ் எம். டைரக்ட் செய்துள்ளார். வருகிற நவம்பர் 2ந் தேதி தீபாவளியன்று ரிலீசாகிறது. கவுண்டமணி நடித்து புகழ்பெற்ற காமெடி கேரக்டரான ஆல் இன் ஆல் அழகுராஜா என்று படத்திற்கு பெயர் வைத்தனர். படத்தின் தலைப்பில் ஆங்கிலம் இருந்தால் படத்துக்கு யூ சான்றிதழோ, வரிவிலக்கோ கிடைக்காது.

அதனால் படத்தின் பெயரை அழகுராஜா என்று பதிவு செய்துவிட்டு விளம்பரங்களில் மட்டும் ஆல் இன் ஆல் அழகுராஜா என்று குறிப்பிட்டார்கள். அதுவும் ஆல்இன்ஆல் என்பது மிகவும் சிறிய எழுத்தில் இருக்கும். இப்போது தணிக்கை குழுவினரும், வரிவிலக்கு குழுவினரும் படத்தின் விளம்பரத்தில்கூட ஆல்இன்ஆல் இருக்க கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் தற்போது வரும் விளம்பரங்களில் ஆல்இன்ஆல் மிஸ்சிங்.

ஆல் இன் ஆல் அழகுராஜா. இப்படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. திடீரென இந்த படத்திலிருந்து ஆல் இன் ஆல் என்ற ஆங்கில வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. ஆல் இன் ஆல் அழகுராஜா என்பது ஒரு படத்தில் கவுண்டமணியின் கேரக்டர் பெயராக வரும். இதனால் ரசிகர்களிடையே இந்த பெயர் பிரபலம் அடைந்தது. இந்நிலையில் கார்த்தி படத்திலிருந்து ஆங்கில வார்த்தை மட்டும் நீக்கியிருப்பது கோடம்பாக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments