விக்ரம் படத்தை கைவிட்ட கௌதம் மேனன்!!!

31st of October 2013
சென்னை::விக்ரம், கௌதம் மேனன் இணைய இருந்த படம் ஆரம்ப நிலையிலே கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நீதானே என் பொன்வசந்தம் படத்திற்குப் பிறகு சூர்யாவை வைத்து கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் எனும் படத்தை இயக்கவிருந்தார். ஆனால் கதை விஷயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சூர்யா அப்படத்திலிருந்து திடீரென விலகினார்.

இதற்கிடையில் விக்ரம், சரத்குமார் ஆகியோரிடம் தனித்தனியே பேசியிருந்தார் கௌதம் மேனன். அதன்படி இவர்கள் இருவரும் வெவ்வேறு படங்களில் கௌதமுடன் இணைய இருந்தனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு அஜீத் நடிப்பில் படம் இயக்க பேசியிருக்கிறார் கௌதம் மேனன். அதற்கு முன்பாக சிம்பு நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படங்கள் எல்லாம் திட்டமிட்டபடி தொடங்குமா என தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு சிம்பு நடிக்கும் படத்தை இயக்க கௌதம் ஸ்கிரிப்டில் கவனம் செலுத்துவதால் விக்ரம் படத்தை அவர் கைவிட்டிருக்கிறாராம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments