அறிமுகமான, ‘கடல்’ படம், கவுந்து விட்டது: ஆனாலும் கவுதம் கார்த்திக் ரொம்ப பிசி!!!

23rd of October 2013
சென்னை::ஒரு சிலருக்கு, முதல் படம் வெற்றியடையாவிட்டால், அடுத்ததாக, அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது, ரொம்ப கஷ்டம். ஆனால், கவுதம் கார்த்திக் விவகாரம், இதற்கு நேர் மாறாக இருக்கிறது. அவர், அறிமுகமான, ‘கடல்’ படம், கவுந்து விட்டது. ஆனாலும், ‘சிப்பாய், வை ராஜா வை, என்னமோ ஏதோ என, அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இந்த பிசியான படப் பிடிப்புகளுக்கு நடுவில், இப்போது, பெரிய பட்ஜெட் வாய்ப்பும், அவரைத் தேடி வந்துள்ளது. ‘சக்கரக்கட்டி படத்தை இயக்கிய, கலா பிரபு, அடுத்து இயக்கப் போகும், ஆக்ஷன் கலந்த காமெடி படத்திலும், கவுதம் கார்த்திக் தான், ஹீரோவாம்.

Comments