அனிருத் மற்றும் ஸ்ருதி ஹாசன் இமான் இசையில் பாடல்!!!

30th of October 2013
சென்னை::இசையமைப்பாளர் அனிரூத் இசையில் ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒரு பாடல் பாடியிருந்தார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடவிருக்கின்றனர். அதுவும், இன்னொரு இசையமைப்பாளரின் இசையில் ஒரு பாடலை பாடவிருக்கின்றனர்.
 
கௌதம் கார்த்தி, ராகுல் ப்ரீத்தி சிங் சேர்ந்து நடித்துள்ள ‘என்னமோ ஏதோ’ படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்திற்கு படம் புதுமையைச் செய்யும் டி.இமான் இந்த படத்தில் அனிரூத்தையும், ஸ்ருதிஹாசனையும் சேர்ந்து பாடவைத்துள்ளார்.
 
மதன்கார்க்கி வரிகளில் ‘நீ என்ன பெரிய அப்பா டக்கரா’ என்ற பாடலை இவர்கள் சேர்ந்து பாடியுள்ளனர். இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments