சயிப் அலிகான் ஜோடியாகும் தமன்னா!!!


26th of October 2013
சென்னை::ச‌ஜித் கானின் ஹிம்மாத்வாலா படத்தின் மூலம்தான் இரண்டாவதாக ஹிந்தி சினிமாவில் அடியெடுத்து வைத்தார் தமன்னா. அஜய் தேவ்கான் நடித்த அப்படம் அதே பெய‌ரில் முன்பு வெளியான படத்தின் ‌ரிமேக். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை (என்றாலும் 44 கோடிகளை இந்தியாவில் மட்டும் வசூல் செய்தது).
 
படம் தோல்வியடைந்ததால் தமன்னாவை கைவிடும் எண்ணம் எதுவும் ச‌ஜித் கானுக்கு இல்லை. என்னுடைய அடுத்தப் படத்தின் ஹீரோயின் தமன்னாதான் என்ற தனது வாக்கை காப்பாற்றியிருக்கிறார். தான் அடுத்து சயிப் அலிகானை வைத்து இயக்கப் போகும் ஹம்ஸகல்ஸ் திரைப்படத்துக்கு தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
 
இந்தப் படமும் ஹிம்மத்வாலா மாதி‌ரி 1982 ல் வெளியான காமெடிப் படம் அங்கூ‌ரின் ‌ரிமேக் என்பது முக்கியமானது.

Comments