வேல்ஸ் பல்கலை., நடிகர் பிரபுவுக்கு டாக்டர் பட்டம்!!!

14th of October 2013
சென்னை::வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 4_வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்திய அரசின் சுகாதார ஆராய்ச்சித்துறையின் செயலரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சித் துறையின் செயலரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநருமான விஸ்வமோகன் கட்டோச் சிறப்பு விருந்தினராக இப்பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பட்டங்களை வழங்கினார்.இப்பகல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கே.கணேஷ் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கினார்.

இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சேகர்  வரவேற்புரை வழங்கியதுடன் ஆண்டறிக்கையும் சமர்ப்பித்தார். இப்பல்கலைக்கழகத்தில் 2012_2013 ஆம் ஆண்டு 2169 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். 1109 இளநிலை பட்ட வகுப்புகளுக்கு தேர்வு எழுதி 997 மாணவர்கள் வெற்றி பெற்றனர். முதுநிலை படிப்பில் 606 மாணவர்கள் தேர்வு எழுதி 591 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஆண்டில் 81 கருத்தரங்குகள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. 72 சிறப்பு சொற்பொழிவுகள் நடந்துள்ளன. இங்குள்ள ஆசிரியர்கள் பன்னாட்டு ஆராய்ச்சி இதழ்களில் 141 ஆராய்ச்சி கட்டுரைகளையும், 23 ஆராய்ச்சி கட்டுரைகள் உள்நாட்டு இதழ்களிலும் வெளியாகியுள்ளன. இப்பல்கலைக்கழகம் 4 காப்புரிமைகளை பதிவு செய்துள்ளது. 4 புதிய பண்டங்களை உருவாக்கியுள்ளது. 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஆராய்ச்சி நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளது. 2012_2013 ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகம் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையொப்பமிட்டு செயல்படுத்தி வருகிறது. மேலும் 935 மாணவர்கள் பல்கலைக்கழக வளாக நேர்காணலில் வேலைகளைப் பெற்றுள்ளனர்.

பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ் மூன்று தனிச்சிறப்பு வாய்ந்தவர்களுக்கு கௌரவ டாக்டர்.பட்டம் வழங்கி சிறப்பித்தார். இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்தவரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநருமான ஸ்ரீமான் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு டி.எஸ்சி. கௌரவப்பட்டமும், தமிழ்ச் சினிமாவில் சிறந்த திரைப்பட நடிகர் பட்டமும், தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்கத்தின் செயலர் முருகன் விளையாட்டுத் துறையில் சிறந்த தொண்டாற்றிமைக்காக ஈ.கடுசிசி பட்டத்தையும் வழங்கி சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர் விஸ்வமோகன் கட்டோச் தனியார் நடத்தும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அவசியத்தைப் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிட்டார். இப்பகல்கலைக்கழகங்கள் மிக அதிகமான மாணவர்கள் தங்களது உயர்கல்வியை பெறுவதற்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளது.

Comments