அக்டோபர் 11ல் மோதுகிறது வணக்கம் சென்னையும், நய்யாண்டியும்!!!

2nd of October 2013
சென்னை::சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நசிம் நடித்துள்ள நய்யாண்டியும், கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் நடித்துள்ள வணக்கம் சென்னையும் அக்டோபர் 11ந் தேதி ரிலீசாகிறது. இரண்டு படங்களையும் தயாரித்த நிறுவனங்களே நேரடியாக ரிலீஸ் பண்ணுகிறது. வணக்கம் சென்னையை ரெட்ஜெயண்ட்டும், நய்யாண்டியை பைவ் ஸ்டார் பிலிம்சும் ரிலீஸ் பண்ணுகிறது. இரண்டுமே காமெடியை மையமாக கொண்ட படங்கள். களவாணி, வாகை சூடவா வெற்றிகளை கொடுத்த சற்குணத்தின் மூன்றாவது படம் என்பதால் நய்யாண்டிக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

கிருத்திகா உதயநிதிக்கு முதல் படம் என்பதால் ரெட்ஜெயண்டுக்கு இது முக்கியமான படம். அதனால் பெரிய அளவில் விளம்பரம் செய்திருக்கிறார். படத்திற்காக ஒரு புரமோஷன் சாங்கையே 50 லட்சம் செலவில் உருவாக்கி இருக்கிறார்கள். இதில் இசை அமைப்பாளர் அனிருத்தே பாடி ஆடியிருக்கிறார். இரண்டு படத்தின் பாடல்களுமே ஹிட்டாகியிருக்கிறது. படமும் ஹிட்டாகுமா என்பது 11ந் தேதி மதியம் தெரிந்து விடும்.

Comments