சென்னை பாக்ஸ் ஆபிஸ் -நய்யாண்டி ரூ.1.02 கோடி மட்டுமே!!!

18th of October 2013
சென்னை::5. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வார நாட்களில் 9.5 லட்சங்களையும், வார இறுதியில் 4.16 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரையான சென்னை வசூல் 68 லட்சங்கள்.
 
4. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

விஜய் சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இரண்டாவது வார இறுதியில் வசூலில் சரிவை கண்டுள்ளது. வார நாட்களில் 1.09 கோடியை வசூலித்த படம் வார இறுதியில் 36.5 லட்சங்களை வசூலித்துள்ளது. முதல் பத்து தினங்களில் சென்னை வசூல் 3.4 கோடிகள்.
 
3. ராஜா ராணி.

இந்த நவீன மௌனராகம் வசூலில் கலக்குகிறது. சென்ற வார இறுதியில் 77.4 லட்சங்களையும், வார நாட்களில் 1.74 கோடியையும் வசூலித்துள்ளது. சென்னையில் இதுவரை 8.9 கோடிகளை தனதாக்கியுள்ளது.
 
2. வணக்கம் சென்னை.

அறிமுக இயக்குனர் கிருத்திகாவின் வணக்கம் சென்னை சென்ற வார இறுதியில் 80.7 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 
1. நய்யாண்டி.
 
அறிமுக நடிகர்களின் சில படங்களே இப்போது இரண்டு கோடிவரை ஓபனிங் வசூலை பெறுகின்றன. தனுஷின் நய்யாண்டிக்கு வெறும் 1.02 கோடி மட்டுமே. வரும் நாட்களில் வசூல் கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது.

Comments