அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கு ரிலீஸ்: தயாரிப்பாளர் அறிவிப்பு!!!

4th of September 2013
சென்னை::அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அதன் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 'ஆரம்பம்' அஜீத் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் படத்தை மெருகேற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
 
இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மிகப்பெரிய அளவில் பேசப்படும். ‘ஆரம்பம்' படத்தின் இசை வெளியீடு குறித்து செய்தி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார். அஜீத் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பினை உண்டாக்கி இருக்கும் படம்தான் ஆரம்பம். இதில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ஆர்யா, டாப்ஸி உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். தீபாவளி பண்டிகை அஜீத்துக்கு ராசியான பண்டிகை என்று சொல்லலாம். ஏனெனில் இதற்கு முன்பு தீபாவளி வெளியிடாக வந்த அஜீத் படங்கள் அனைத்தும் ஹிட்டாயின. அந்த வகையில் ஆரம்பம் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.
 
tamil matrimony_INNER_468x60.gif

Comments