நடிகர் பரத் தனது காதலியை மணமுடித்தார்!!!

11th of September 2013
சென்னை::இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற555 படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பரத் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றிருந்தார்.
பரத்திற்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா – ஜெஸ்ஸி ஆகியோரின் மகளான டாக்டர் ஜெஸ்லி (பல்மருத்துவர்) ஆகிய இருவருக்கும்  சனிக்கிழமை(09.09.2013) திருமணம் நடைபெற்றது .
 
இவர்களின் வரவேற்பு  நிகழ்ச்சி செப்டம்பர்14 சனிக்கிழமை அன்று சென்னை MRC நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில்  மாலை ஐந்து மணிக்கு  நடைபெற உள்ளது.
 
திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்ற கலைஞர்கள் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி ஊடக நண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்களோடும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது..
 
அதனைத்தொடர்ந்து வெயில், நேபாளி, எம்.மகன், யுவன் யுவதி உள்பட 23 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பரத் நடிப்பில் வெளியான 555 நல்ல வரவேற்பை பெற்றது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் பரத் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றிருந்தார்.
 
வரவேற்பு நிகழ்ச்சி செப்டம்பர் 14ம் தேதி சென்னை MRC நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை ஐந்து மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு புதுமண தம்பதியை வாழ்த்த இருக்கின்றனர். பரத் - ஜெஸ்ஸி இருவரும் காதலித்து வந்தநிலையில் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் மணமுடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments