விஷாலின் பாண்டிய நாடு ஆடியோ!!!

23rd of September 2013
சென்னை::பாண்டிய நாடு படத்தின் ஒரு பாடல் நேற்று லயோலா கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. விழாவில் படத்தின் ஹீரோ விஷட்ல், ஹீரோயின் லட்சுமி மேனன், நடிகர் விக்ராந்த், இயக்குனர் சுசீந்திரன், இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் தயாரித்து நடிக்கும் படம் பாண்டிய நாடு. மதுரை பின்னணியில் தயாராகியுள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கியமான வேடமேற்றிருக்கிறார். படத்தில் அவரது வேடம் ஹைலைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

விஷால் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர். அதனால் தனது தயாரிப்பில் உருவான பாண்டிய நாடு படத்தின் பாடல் வெளியீட்டை லயோலா கல்லூரியில் நேற்று நடத்தினார். படத்தில் இடம் பெற்றுள்ள ஒத்தகடை மச்சான் என்ற பாடலை மட்டும் நேற்று வெளியிட்டனர்.

விழாவில் பேசிய விஷட்ல், இந்தக் கல்லூரியில்தான் நான் விஸ்காம் படித்தேன். படித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்றுதான் நினைத்தேன். காலத்தின் சூழ்நிலையால் நடிகராகிவிட்டேன். என்னுடைய தயாரிப்பில் உருவாகும் முதல் படம் இது. கிட்டத்தட்ட எனக்கு இது முதல் குழந்தை மாதிரி என்றார்.

Comments