அழகுராஜா ஆடியோ ரைட்ஸ் - சோனி வாங்கியது!!!

6th of September 2013
சென்னை::தீபாவளிக்கு கார்த்தியின் அழகுராஜாவை வெளியிடுவது என முடிவு செய்து, பரபரவென வேலைகளில் இறங்கியுள்ளது ஸ்டுடியோ கி‌‌‌ரீன்.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்‌ரிக் ஹிட் கொடுத்த ராஜேஷ் எம்-மின் நான்காவது படம் அழகுராஜா.
 
ராஜேஷ் கதையில்லாமல் படமெடுத்தாலும், சந்தானம் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரமாட்டார். நம்ம யூகம் இல்லைங்க, இது ராஜேஷே சொன்னது. கிட்டத்தட்ட அழகுராஜாவில் சந்தானம் இரண்டாவது ஹீரோ. காஜல் அகர்வால் ஹீரோயின். பிரபு, சரண்யா என வெயிட்டான நடிகர்கள்.
இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.
 

இதுவரை யுவன்தான் ராஜேஷின் படத்துக்கு இசை. முதல்முறையாக அழகுராஜாவில் தமன்.  6 ஆம் தேதி, அதாவது  மத கஜ ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகும் திரையரங்குகளில் அழகுராஜாவின் ட்ரெய்லரை நீங்கள் பார்க்கலாம்.

Comments