சந்தானம் மற்றும் விடிவி கணேஷனுடன் இணைந்து நடித்த யானை!!!

25th of September 2013
சென்னை::இங்க என்ன சொல்லுது’ படத்தில் சந்தானம் மற்றும் விடிவி கணேஷனுடன் இணைந்து யானை ஒன்றும் நடித்துள்ளது.
 
விடிவி கணேஷ் தயாரித்து நாயகனாக அறிமுகமாகும் படம்
 
இங்க என்ன சொல்லுது. இதில் அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் சந்தானம் விடிவி கணேஷனின் நண்பராக நடிக்கிறார்.
 
தற்போது இவர்களுடன் யானை ஒன்றும் நடித்துள்ளது. சமீபத்தில்தான் சந்தானம் மற்றும் விடிவி கணேஷனுடன் இணைந்து யானை நடித்த காட்சி கோயம்புத்தூர் மாவட்டம் வாளையாரில் படமாக்கப்பட்டது. இரண்டு நாட்கள் யானையை வைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
 
இவர்களுடன் நடித்த அந்த யானையின் பெயர் ‘தேவதாசன்’.  யானை நடித்த காட்சி படத்தில் 10 நிமிடங்கள் இடம்பெறுகின்றன. வின்சென்ட் செல்வா இயக்கும் இந்தப் படத்திற்கு தமண் இசையமைக்கிறார்.

Comments