விஜய்க்கு ஜோடியாகிறார் நஸ்ரியா நஸிம்

3rd of September 2013
சென்னை::விஜய்க்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜில்லா படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸுடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக். முதலில் விஜய்-முருகதாஸ் இணையும் படத்தில் சமந்தா நடிப்பார் என செய்திகள் வெளியாயின.

ஆனால் தற்போது அவர் கிடையாது போலத் தெரிகிறது. சமந்தாவுக்கு பதில் தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நஸ்ரியா நசீம் நடிக்கலாம் என கூறப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக நஸ்ரியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

நஸ்ரியா நசீம் தமிழில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தனுஷுடன் 'நய்யாண்டி, ஜெய்யுடன் 'திருமணம் எனும் நிக்காஹ்' ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர் ஜீவா, கார்த்தியுடனும் ஜோடி போட இருக்கிறார். அதேசமயம் ஆர்யாவுடன் நஸ்ரியா நடித்த 'ராஜா ராணி படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Comments