அக்கா ஸ்ருதியின் அட்வைஸ் கேட்டு இந்தி படத்தில் நடிக்கிறார் அக்ஷரா ஹாசன்!!!

3rd of September 2013
சென்னை::இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா.சில இந்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் அக்ஷரா ஹாசன். இவரை ஹீரோயினாக நடிக்க வைக்க நிறைய பேர் கேட்டனர். ஆனால் நடிப்பில் ஆர்வம் இல்லை. டைரக்ஷன்தான் பிடிக்கும் என மறுத்து வந்தார் அக்ஷரா.
 
இப்போது திடீரென ஹீரோயினாக நடிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதற்கு அவரது அக்கா ஸ்ருதிதான் காரணம் என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் தொடர் தோல்விகளை தந்த ஸ்ருதி, இப்போது அடுத்தடுத்து சில ஹிட் படங்களை கொடுத்தார். இதனால் பாலிவுட், டோலிவுட¢டில் அவர் பிசியாகிவிட்டார். செட்டுக்கு வந்து நடித்துவிட்டு போவதுதான் ஈஸி வேலை. ஒரு ஹிட் கொடுத்தால் போதும். ஸ்டார் ஆகிவிடலாம் என அக்ஷராவுக்கு ஸ்ருதி அட்வைஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து அக்ஷராவும் தற்போது நடிப்பு பயிற்சி பெற்று வருக¤றார். கும்பகோணத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்கிற பால்கி, பாலிவுட்டில் இயக்குனராக உள்ளார். இவர் கமல்ஹாசனின் நண்பர். இந்தியில் அமிதாப் நடிப்பில் சீனி கம், பா ஆகிய படங்களை இயக்கினார். இப்போது இவர் அடுத்து இயக்கும் படத்தில்தான் அக்ஷரா நடிக்க உள்ளார்.இதற்கிடையே அக்கா ஸ்ருதியை போல மும்பையில் தனியாக வசிக்க அக்ஷரா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் சில அபார்ட்மென்ட்களில் வீடு தேடி வருகிறார். முதலில் டைரக்ஷன், பிறகு நடிப்பு என அக்ஷரா மாறி மாறி முடிவு எடுத்தாலும் அவரது சுதந்திரத்தில் அப்பா கமல், அம்மா சரிகா தலையிட வ¤ரும்பவில்லையாம். -

Comments