ஆர்யாவை மிகவும் பிடிக்கும்: காவ்யா ஷெட்டி!!!

3rd of September 2013
சென்னை::நடிகர் ஆர்யாவை மிகவும் பிடிக்கும் என்று காவ்யாஷெட்டி தெரிவித்துள்ளார்.
 
பிரபல விளம்பர மாடல் அழகி காவ்யா ஷெட்டி நாயகியாக அறிமுகமாகும் படம் 'ஷிவானி'. இந்தப் படத்தை சாய் கோகுல் ராம்நாத் இயக்குகிறார். சாக்ஸ் பிச்சர் தயாரிக்கிறது. முற்றிலும் திகில் படமான இதில் நாயகனாக சந்துருவும் இன்னொரு நாயகியாக லக்ஷ்மி நாயரும் நடித்துள்ளனர்.
 
இகு குறித்து காவ்யா ஷெட்டி கூறியிருப்பதாவது: ‘ஷிவானி’ ஒரு திகில் படம். நான் இயல்பாகவே பயந்த பெண். இரவில் தனியாக செல்ல அச்சம் தான். ஆனால் பயம் பேய் , பிசாசினால் அல்ல! மனித உருவில் திரியும் மிருகங்களால் தான்! பெண்களுக்கு எதிராக தொடரும் வன் கொடுமைகள் மனதை காயப்படுத்துகிறது.
 
என் மனம் மும்பை பெண் புகைப்பட நிருபருக்காக அழுகிறது. என் கருத்தின் படி சினிமா உலகம், பொதுவான சமுதாய உலகை விட பாதுகாப்பானது என்றார். மேலும் உங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார் என்று கேட்ட போது‘’நிறைய ரசிகைகள் உள்ள நடிகர் ஆர்யா தனக்கு ரொம்பவும் பிடித்த நடிகர்’ என்று கூறினார். 

Comments