இறுதி கட்டத்தை எட்டியது தனுஷின் நய்யாண்டி!!!

3rd of September 2013
சென்னை::தனுஷ், நஸ்ரியா நசீம் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் படம் நய்யாண்டி. இப்படத்தை சற்குணம் இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே வாகை சூடவா, களவானி படங்களை இயக்கி இருக்கிறார்.
 
சொட்டவாளக் குட்டி என்ற தலைப்பில் சற்குணம் இயக்க ஆரம்பித்த படம்தான் இடையில் நய்யாண்டியாக வளர்கிறது. இந்தப் படத்தை ஆடுகளம் படத்தை தயாரித்த ஃபைவ்ஸ்டார் கதிரேசன் தயாரித்து வருகிறார். வாகை சூடவா புகழ் ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும் படத்தில் சரண்யா பொன்வண்ணன், அஸ்வின் ராஜ் மற்றும் சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இதில் கும்பகோணத்தில் குத்து விளக்கு செய்து விற்பனை செய்யும் இளைஞனாக நடிக்கிறார் தனுஷ். இதுவரை அவர் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாம். இதனை முடித்த கையோடு தனுஷ் வேலையில்லா பட்டதாரி, அனேகன் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments