நிஜத்தில் ப்ளஸ் ஒன் மாணவி! ஆனால் படத்தில் ஸ்கூல் டீச்சர்!!!

 23rd of September 2013
சென்னை::பாண்டிய நாடு படத்தில் லட்சுமி மேனன் டீச்சர் வேடத்தில் நடிக்கிறார்.
 
விஷால் தயாரித்து நடிக்கும் படம்தான் பாண்டிய நாடு. ஆதலால் காதல் செய்வீர் படத்தின் இயக்குனர் சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இருவரும் முதன் முறையாக இப்படத்தின் மூலம் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

இதில் லட்சுமி மேனன் ஸ்கூல் டீச்சராக நடித்து வருகிறார். நிஜத்தில் லட்சுமி மேனன் ப்ளஸ் ஒன் படித்து வரும் மாணவி! அப்படியிருக்கையில் படத்திற்கு ஸ்கூல் டீச்சர். இதனை பார்க்கையில் ‘காக்க காக்க’ படத்தில் ஜோதிகா ஏற்று நடித்த வேடம் மாதிரி இருக்குமாம்.

படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று சமீபத்தில் வெளியானது. ’பாண்டியநாடு’ தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. தலைவாவை தொடர்ந்து வேந்தர் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

Comments