சிம்புவின் ரீமேக் மோகம்: !ஒரு மொழியில் வெற்றி பெற்ற படங்களை இன்னொரு மொழியில் ரீமேக்!!!

25th of September 2013
சென்னை::ஒரு மொழியில் வெற்றி பெற்ற படங்களை இன்னொரு மொழியில் ரீமேக் செய்து வரும் கலாசாரம் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இதுவரை நேரடிப்படங்களில் மட்டுமே நடித்து வந்த சிம்புவுக்கும் இப்போது ரீமேக் படத்தில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ். இவர் நடித்த பொட்டுகாடு என்ற தெலுங்கு படம் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போடுகிறதாம். கன்னடத்தில் வெளியான கோவிந்தாய நமஹ என்ற படத்தின் ரீமேக்கான இப்படத்தைதான் அடுத்து தமிழில் ரீமேக் செய்யப்போகிறாராம் சிம்பு.

இப்படத்தில் சிம்புவின் பாணிக்கேற்ப நிறைய ரொமான்ஸ் காட்சிகள் உள்ளதோடு, ஆக்சன், காமெடி என கமர்சியலுக்கு எந்தவித குறையும் இல்லாத அளவுக்கு கதையும் உள்ளதாம். ஏற்கனவே மஞ்சு மனோஜ் நடித்த என்னை தெரியுமா என்ற தமிழ் படத்திலே தண்ணி கருத்திருச்சி என்ற பாடலை பாடிய சிம்பு, இந்த படத்திலும் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம்.

மேலும், இந்த பொட்டு காடு படத்தை தமிழில் ரீமேக் செய்யும்போது தனது நண்பரான மஞ்சு மனோஜையும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கும் முடிவில் இருக்கிறாராம் சிம்பு.

Comments