பாப்கார்ன் காமெடிக்கு திரும்பும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி!!!

4th of September 2013
சென்னை::தமிழ் சினிமா அவ்வப்போது ஏதோவது ஒரு டிரண்ட் மாறிக் கொண்டே இருக்கும். புராணப் படங்களிலிருந்து கிராமத்து படங்கள் வரைக்கும் இந்த டிரண்ட் மாறிக் கொண்டிருந்தது. ஒரு படம் ஹிட்டாகி விட்டால் அதைத் தொடர்ந்து வரிசையாக அதே மாதிரி படங்கள்தான் ரிலீசாகும். பருத்தி வீரனின் மெகா ஹிட்டுக்கு பிறகு அதே மாதிரி அழுக்கு லுங்கி, செக்டு சட்டை ஹீரோக்கள் நிறைய வந்தார்கள். 2013ம் ஆண்டு காமெடி ஆண்டாக விடிந்தது.

பாப்கார்ன் சிந்தும் அளவுக்கு குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் முழு நீள காமெடி படத்துக்கு பாப்கார்ன் காமெடி படம் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த மாதிரி படத்தில் லாஜிக்கோ, கதையோ, மெசேஜோ எதுவும் இருக்காது.  சிரித்துவிட்டு மட்டுமே செல்ல முடியும். இந்த ஆண்டின் துவக்கத்தில் கண்ணா லட்டு திண்ண ஆசையா இந்த டிரண்டை ஆரம்பிச்சு வைச்சுது. லட்வின் ஹிட்டு அத்தனை இயக்குனர்களையும் காமெடி பக்கம் யூ டேர்ன் அடிக்க வைத்தது. பத்தாயிரம் கோடி, சுடச்சுட, சந்தமாமா, லொள்ளு தாதா பராக் பராக், ஒன்பதுல குரு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, யாருடா மகேஷ், சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், தீயாவேலை செய்யணும் குமாரு, தில்லுமுல்லு, கலகலப்பு, சொன்னா புரியாது, சும்மா நச்சுனு இருக்கு, தேசிங்கு ராஜா இப்படி இந்த ஆண்டு வரிசையாக இதுவைரக்கும் காமெடி படங்கள் ரிலீசாகியிருக்கிறது. அதிக அளவில் ஹிட்டானதும் காமெடி படங்கள்தான்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. பட்டைய கிளப்பணும் பாண்டியா, மதகஜராஜா, பண்ணையாரும் பத்மினியும், வானவராயன் வல்லவராயன், ரெண்டாவது படம், ஆர்யா சூர்யா, சுட்ட கதை, மொக்க படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், கன்னியும் காளையும் செம காதல், தெனாலிராமன், கல்யாண சமையல் சாதம் இப்படி 50 மேற்கும் மேற்பட்ட காமெடி படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. சுமார் 100 படங்கள் தயாரிப்பில் இருக்கிறது.

இந்த டிரண்ட் எத்தனை நாளைக்கு ஓடும்னு தெரியாது. ஆனால் இப்போதைக்கு தியேட்டர்காரர்களும், டிஸ்ட்ரிபியூட்டர்களும், மீடியேட்டர்களும் காமெடி படத்தை தேடித்தான் ஓடுகிறார்கள். காமெடியோடு அப்படியே கொஞ்சம் கிளாமர், ஆக்ஷன்னு கலந்து விட்டா ஹிட்டு கன்பார்முன்னு நினைக்கிறாங்க. அதனாலதான் சீரியசா படம் எடுக்குற பாண்டிராஜ், எழில் போன்ற  டைரக்டருங்க கூட காமெடி பக்கம் தாவிக்கிட்டிருக்காங்க.

கடுமையான மனஅழுத்த்தில் இருக்கும் இன்றைய மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு காமெடி படங்கள் வடிகாலாக இருக்காலம். ஆனால் காமெடி படத்தை மட்டுமே ரசிக்கும் தன்மை அத்தனை சிறப்பு வாய்ந்ததல்ல. ஒரு வேளை இந்த டிரண்ட் நீடித்து விடுமானால் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், தண்ணீர் தண்ணீர், 16 வயதினிலே, அந்த 7 நாட்கள், மவுன ராகம் போன்ற காலத்தை வென்று நிற்கும் கனமான படங்கள் வராமல் போகும் என்று சினிமா பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

Comments