கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் 'பாண்டிய நாடு' பாடல் வெளியீடு!!!

20th of September 2013
சென்னை::விஷால் நடிப்பில், சுசீந்திரன் இயக்கும் படம் 'பாண்டிய நாடு'. விஷால் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் இப்படத்தில், ஹீரோயினாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் ஒரு பாடல், வரும் செப்டம்பர் 22ஆம் தேதி, சென்னை லயோலா கல்லூரியில், அக்கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளது.

லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள கலை அரங்கத்தில் நடைபெற உள்ள இந்த ஒரு பாடல் வெளியீட்டு விழாவில், விஷால், இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் டி.இமான், லட்சுமி மேனன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

Comments