நடிகர் விக்ரமின்,சமீபத்திய படங்கள் சொதப்பியதால், தற்போது மீண்டும் ஹரியுடன் இணைகிறார் விக்ரம்!!!

26th of September 2013
சென்னை::நடிகர் விக்ரமின்,சமீபத்திய படங்கள் சொதப்பியதால், தற்போது, ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும்,ஐ படத்தை, பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இந்த படத்துக்கு பின், தமிழில் மீண்டும் முன்னணி இடத்துக்கு வந்து விடுவேன் என, உறுதியாக கூறுகிறார், அவர்.
 
இந்த படத்தை தொடர்ந்து, கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகும் ஒரு படத்திலும், அதையடுத்து, தரணி இயக்கும் படத்திலும் நடிக்கசம்மதித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழில் தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, சாமி படத்தைஇயக்கிய, ஹரி இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறாராம். விக்ரம். சாமி, அருள்ஆகியவற்றை தொடர்ந்து,விக்ரம் – ஹரி கூட்டணி இணையும், மூன்றாவது படம், இது. 

Comments