போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சிந்து மயங்கி விழுந்தார்!!!

11th of September 2013
சென்னை::விருகம்பாக்கம் கோட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர்  நடிகை சிந்து (35). அங்காடி தெரு, பரதேசி, வைத்தீஸ்வரன், நான் மகான் உள்ளிட்ட சினிமா படங்களில் நடித்துள்ளார். டிவி தொடரிலும் நடித்து வருகிறார். கடந்த 6ம் தேதி தூக்க மாத்திரை சாப்பிட்டு சிந்து தற்கொலைக்கு முயன்றார். தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார். நேற்று டிஸ் சார்ஜ் செய்யப்பட்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த சிந்து நேரடியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு கொடுத் தார். மனுவை கொடுத்து விட்டு வெளியே வந்தவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு, பரபரப்பு ஏற்பட்டது.

அருகில் உள்ளவர்கள் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர். பின்னர் சிந்து அளித்த பேட்டி: சினிமா தயாரிப்பு நிறுவனம்  தொடங்கி உள்ளேன். படம் தயாரிப்பதற்காக புரசைவாக்கம் தானா தெருவை சேர்ந்த சாந்தி, அவரது தங்கைகள் சுமதி, அமுலு, வசந்தா, ஈஸ்வரி ஆகியோரிடம் 4.5 லட்சம் கடன் வாங்கினேன். அதற்காக மாதம் 90 ஆயிரம் வட்டி கட்டி வந்தேன். ஓரிரு மாதங்கள் வட்டி கட்ட முடியவில்லை.

இதனால், 5 பேரும் அடியாட்களுடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து அசிங்கமாக பேசி மிரட்டினார்கள். ஆசிட் வீசி கொன்று விடுவோம் என்றார்கள். இது பற்றி விருகம்பாக்கம் போலீ சில் புகார் செய்தேன். அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.  போலீசார் சம்பந்தப்பட்ட 5 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

Comments