தயாரிப்பாளரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்!!!

1st of September 2013
சென்னை::வெயில், கிரிடம், குசேலன், அங்காடித் தெரு, மதராசபட்டினம், ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், தெய்வதிருமகள், மயக்கம் என்ன, பரதேசி, தலைவா உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவராக திகழும் ஜி.வி.பிரகாஷ் குமார், திரைப்பட தயாரிப்பாளராகியுள்ளார்.

தற்போது ராஜா ராணி, நிமிர்ந்து நில், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, இரும்பு குதிரை ஆகியப் படங்களிக்கு பிஸியாக இசையமைத்துக்கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், 'ஜி.வி.பிரகாஷ் குமார் புரொடக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு

இப்படத்தில் கதிர் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ஓவியா நடிக்கிறார். இவர்களுடன் ராமமூர்த்தி, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாலுமகேந்திராவிடம் கதை நேரம், ஜூலி கணபதி ஆகியப் படங்களில் உதவி இயக்குநராகவும், வெற்றி மாறனிடம் பொல்லாதவன் படத்தில் இணை இயக்குநராகவும், ஆடுகளம் படத்திற்கு வசனம் எழுதியவருமான விக்ரம் சுகுமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய இரு குடும்பங்களில் நடைபெறும் சம்பவங்கள், செய்முறைகள், பழக்க வழக்கங்களை மையமாக கொண்டு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் கமர்ஷியலாக உருவாகும் இப்படத்தின் முழு படப்பிடிப்புமே தேனி மற்றும் கேரளா சுற்றுபுரங்களில் நடைபெற்று முடிவடைந்துவிட்டது.

இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க, பாடல்களை ஏகாதேசி எழுதியுள்ளார். ராகுல் தர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ரவி கே.சந்திரனின் உதவியாளர் ஆவார்.

இப்படத்தின் இசை செப்டம்பர் மாதத்திலும், படம் அக்டோபர் மாதத்திலும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் 'மதயானக்கூட்டம்' என்ற படத்தை தனது முதல் படமாக ஜி.வி தயாரிக்கிறார்.

Comments