மௌனம் ரவி சசிதரன் இயக்கும் “கடை எண் 6 ”காமெடி ,திகில் படமாக உருவாகிறது!

3rd of September 2013
சென்னை::மௌனம்ரவி சசிதரன் இயக்கும் “கடை எண் 6 ”காமெடி ,திகில் படமாக உருவாகிறதுஅட்டகத்தி தினேஷ் நடிக்கும் “வாராயோ வெண்ணிலாவே” படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சசிதரன் அடுத்து இயக்கப் போகும் படத்திற்க்கு “கடை எண் 6 “என் என்று பெயரிட்டுள்ளார்.
கிரேட் சர்க்கிள் எண்டர்டைனர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கமல் ஏகாம்பரம் என்பவர் தயாரிக்க உள்ளார்.
எல்லோரும் அறிந்த நாயகன் , மற்றும் மூன்று புதுமுகங்கள் நடிக்க உள்ளனர்
இசை – கார்த்திக் ராஜா
எடிட்டிங் – v.t.விஜயன்
பாடல்கள் – பா.விஜய்,கபிலன்
எழுதி இயக்குபவர் சசிதரன்
தயாரிப்பு – கமல் ஏகாம்பரம்.
படம் பற்றி இயக்குனர் சசிதரன் கூறுகையில் …..
வாராயோ வெண்ணிலாவே” படம் முதலில் பீட்சா தயாரிப்பாளருக்கு நான் இயக்குவதாக இருந்தது சில ,பல காரணங்களால் அது முடியாமல் போனது.அதற்கு பிறகு அபிஷேக் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது இந்த படம் ரிலீஷுக்கு முன்பே அதுவும் படத்தின் டிரெய்லரை பார்த்தே எனக்கு “கடை என் 6” படத்தை இயக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார் தயாரிப்பாளர் கமல் ஏகாம்பரம்.
“கடை என் 6” காமெடியும் இருக்கும் திரிலிங்கும் இருக்கும் படத்தின் கதையை கேட்ட பசங்க பாண்டிராஜ் ,அமீர் இருவரும் ரொம்ப நல்ல கதை என்று பாராட்டினார்கள் என்கிறார் சசிதரன்.
இவர் ஏற்கனவே சென்னை28 படத்திற்கு வசனம் எழுதியவர்.

Comments