50 நாட்களை கடந்தது 555!!!

23rd of September 2013
சென்னை::சசி இயக்கத்தில் பரத் நடித்திருந்த படம் 555. மிருத்திகா ஹீரோயின். கடந்த பல ஆண்டுகளாகவே தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பரத் ஒரு வெற்றிக்காக சுமார் இரண்டு வருடங்கள் உழைத்து உருவான படம் 555. சிக்ஸ் பேக்ஸ் வைத்து மிகவும் சிரமப்பட்டு நடித்திருந்தார். 555 அவர் எதிர்பார்த்த மிகப்பெரிய வெற்றியை கொடுக்காவிட்டாலும் இப்போது 50 நாட்களை தாண்டி வெற்றிப்பட வரிசையில் சேர்ந்துள்ளது. தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரிதாக லாபம் கிடைக்கவில்லை என்றாலும் யாருக்கும் நஷ்டம் இல்லை என்று வியாபார தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ள பரத்துக்கு மனைவி வந்த நேரம் ஒரு வெற்றியை ருசித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகள் வேறெந்த படமும் ஒப்புக் கொண்டிராத நிலையில் இப்போது மீண்டும் கதைகேட்டு வருகிறார். இதற்கிடையில் ஜாக்பாட் என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் பரத்தும், நிலாவும் நடித்து முடித்திருக்கும் கில்லாடி படம் ரிலீசாகவேண்டியதிருக்கிறது.

Comments