'தசாவதாரம்' படத்துக்கு பிறகு கமல்ஹாசன் ஜோடியாக மீண்டும் அசின்!!!

20th of August 2013
சென்னை::தசாவதாரம்' படத்துக்கு பிறகு கமல்ஹாசன் ஜோடியாக மீண்டும் அசின் நடிப்பார் என தெரிகிறது. லிங்குசாமி தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கும் படம் 'உத்தம வில்லன்'. இந்த படத்தில் கமல்ஹாசன் ஹீரோ. கிரேஸி மோகன் திரைக்கதை, வசனங்களை எழுதுகிறார். அக்டோபரில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேசப்பட்டது. கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் அசினிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் தசாவதாரம் படத்தில் கமலுடன் அசின் நடித்துள்ளார். இப்பட ஹீரோயின் வேடத்துக்கு ஹோம்லிலுக்குடன் நடிகை தேவைப்படுவதால் அசினிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இப்போது 'விஸ்வரூபம் 2' ஷூட்டிங்கிற்காக கொடைக்கானலில் இருக்கிறார் கமல். ஷூட்டிங் முடிந்ததும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். தீபாவள¤க்கு 'விஸ்வரூபம் 2' ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Comments