ஜில்லா படத்தை தொடர்ந்து விஜய்யின் ‘அதிரடி’!!!

22nd of August 2013
சென்னை::2011ல் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் விஜய்யின் கேரியரில் ஒரு மாறுபட்ட படமாக அமைந்தது.
 
இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய் - ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையப்
போவது நினைவிருக்கலாம். இதனை இயக்குனர் முருகதாஸ் ஏற்கெனவே உறுதி செய்துவிட்டார்.
 
இந்நிலையில் விஜய்-ஏ ஆர் முருகதாஸ் படத்துக்கு 'அதிரடி' என்று பெயரிடப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தலைப்பை அறிவிக்கும் வரை இது போன்ற யூகங்கள் கிளம்பிக் கொண்டு தான் இருக்கும். விஜய் தற்போது ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

Comments