சுட்ட கதை படத்துக்கு யு சான்றிதழ்!!!

28th of August 2013
சென்னை::சுட்ட கதை படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது.
 
லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள படம் ’சுட்ட கதை’. இதில் நாயகர்களா
க பாலாஜி, வெங்கி அறிமுகமாகின்றனர். லஷ்மிபிரியா நாயகியாக நடிக்கிறார். பாலாஜி வேணுகோபால், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுபு இயக்குகிறார்.
காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படமாம் இது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
 
இதனிடையே சுட்ட கதை படம் தணிக்கைக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழு அனைவரும் பார்த்து மகிழக் கூடிய யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

Comments