சென்னை பாக்ஸ் ஆபிஸ் - து‌‌ப்பா‌க்‌கியை நெரு‌ங்கு‌ம் ‌சி‌ங்க‌ம்!!!!

20th of August 2013
சென்னை::சிவாவின் அண்டர் ப்ளே காமெடிக்கு பெ‌ரிதாக வரவேற்பில்லை. நாம் லவுட் ஸ்பீக்கர் காமெடியை தொடர்ந்து ரசிப்பதாலும் இருக்கலாம். சொன்னா பு‌ரியாது நான்காவது வார இறுதியில் 2.24 லட்சங்களையும், வார நாட்களில் 4.5 லட்சங்களையும் வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில் வசூலித்தது 1.45 கோடி.
 
சென்ற வாரம் புதிய வெளியீடுகளால் யானை படீரென்று படுத்துவிட்டது. சென்ற வார இறுதியில் 3.8 லட்சங்களையும், வார நாட்களில் 5.4 லட்சங்களையும் வசூலித்துள்ளது. சென்னையில் இதுநாள் வரையான வசூல் 3.73 கோடிகள்.
 
சிங்கம் இன்னமும் ஸ்டெடியாகதான் உள்ளது. இதுவரை சென்னையில் 13.2 கோடிகளை வசூலித்து விஸ்வரூபத்தை ஓவர்டேக் செய்திருக்கிறது. துப்பாக்கியை நெருங்குகிறது. சென்ற வார இறுதியில் 9.3 லட்சங்களையும், வார நாட்களில் 9.7 லட்சங்களையும் வசூலித்துள்ளது.
 
சசி படம் எதிர்பார்ப்பை பூரணமாக பூர்த்தி செய்யவில்லை. அதன் எதிரொலியை பாக்ஸ் ஆபிஸில் பார்க்க முடிகிறது. தலைவா வெளியாகாத கேப்பில் உள்ளே நுழைந்த இந்தப் படம் வார இறுதியில் 47 லட்சங்களையும், வார நாட்களில் 49 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.6 கோடி.
 
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்துக்கு வெளியான படம் வெள்ளி, சனி, ஞாயிறில் 89 லட்சங்களை வசூலித்தது. வியாழக்கிழமை வசூலையும் சேர்த்தால் 1.2 கோடி. அறிமுக நடிக‌ரின் படத்துக்கு இப்படியொரு வசூல் அமைய இயக்குனர் சு
சீந்திரனின் மீதுள்ள ரசிகர்களின் நம்பிக்கைதான் காரணம்.

Comments