மனோஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!!!

20th of August 2013
சென்னை::இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
 
தான் இயக்கிய ‘தாஜ்மகால்’ படம் மூலம் மனோஜை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அதன்பிறகு ‘சமுத்திரம்’, ‘கடல் பூக்கள்’, ‘ஈரநிலம்’ என சில படங்களில் நடித்தார். ஆனால் மனோஜால் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி எதுவும் கொடுக்க முடியவில்லை. இருப்பினும் அவர் கடைசி முயற்சியாக தன்னுடைய தந்தை இயக்கத்தில் அன்னக்கொடி படத்தில் நடித்தார்.
 
இதன்பிறகும் அவருக்கு வாய்ப்பு எதுவும் அமையவில்லை. இந்நிலையில்தான் மனோஜ் நடிப்பை ஓரங்கட்டி விட்டு விரைவில் புதிய படம் ஒன்றின் மூலம் இயக்குனராக அறிமுகமாகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தான் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயனை புக் செய்துள்ளாராம். மனோஜுக்கு ஏற்கெனவே தன்னுடைய தந்தை பாரதிராஜா, மணிரத்தனம், ஷங்கர் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் இருக்கிறது.

Comments