வேங்கைச்சாமி படத்தில் தனுசுக்கு ஜோடியாகிறார் மனீஷா யாதவ்!!!

23rd of August 2013
சென்னை::பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் அறிமுகமானவர் மனீஷா யாதவ். அப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்த மனீஷா, அதன்பிறகு சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் மாடர்ன் ஹீரோயினியாக நடித்தார். அவரது நடிப்பு பேசும்படியாக இருந்ததால் இப்போது கோலிவுட் இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் மனீஷா.

இந்த ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடித்தபோதே கரு.பழனியப்பன் இயக்கியுள்ள ஜன்னல் ஓரம் மற்றும் மைனா விதார்த் நடிக்கும் பட்டைய கிளப்பு பாண்டியா ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வந்த மனீஷாயாதவ், இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வேங்கைச்சாமி படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்துக்காக கடந்த சில மாதங்களாகவே கதாநாயகி வேட்டை நடத்தி வந்த வெற்றிமாறன், ஆதலால் காதல் செய்வீர் படத்தில் மனீஷாவின் நடிப்பை பார்த்த பிறகுதான் இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக அவரால் பர்பாமென்ஸ் பண்ண முடியும் என்ற நம்பிக்கையில் புக் பண்ணியுள்ளாராம் இதன்காரணமாக, கோலிவுட்டின் முன்னணி நாயகி பட்டியலில் இடம்பிடிக்க வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார் மனீஷாயாதவ்.

Comments