தனுஷின் 25வது படத்தின் தலைப்பு 'வேலையில்லா பட்டதாரி!!!

18th of August 2013
சென்னை::தனுஷ் நடிக்க உள்ள 25வது படத்திற்கு 'வேலையில்லா பட்டதாரி' என்றூ தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், எங்கேயும் எப்போதும், எதிர் நீச்சல், 3 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ், தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்கும் முதல் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். நடிப்பதுடன் இப்படத்தையும் தனுஷே தயாரிக்கிறார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Comments