நடிகை மித்ரா குரியனுக்கு விரைவில் திருமணம்!!!

4th of July 2013
சென்னை::மலையாளம் மற்றும் தமிழ் சினிமா நடிகையான
மலையாளத்தில் குலுமால், பாடிகார்ட், மாஸ்டர்ஸ், கிராண்ட் மாஸ்டர், லேடீஸ் அண்ட ஜென்டில்மேன் போன்ற பல படங்களில் நடித்தவர் மித்ரா குரியன். தமிழில் விஜய் ஜோடியாக காவலன் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நந்தனம், கந்தா போன்ற படங்களிலும் நடித்தார்.

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது, இவருக்கும், இசைத்துறை தொழில்நுட்ப வல்லுநர் வில்லியம் பிரான்சிஸ் என்பவருக்கும் காதல் மலர்ந்ததாம். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இப்போது பிருத்விராஜ் ஜோடியாக லண்டன் பிரிட்ஜ் எனும் மலையாளப் படத்தில் நடித்து வரும் மித்ரா, தமிழில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இவ்விரு படங்களை முடித்த பிறகு மித்ரா திருமணம் செய்து கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மித்ரா குரியன், இசைத்துறை தொழில்நுட்ப வல்லுநரை காதலிக்கிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments