க்ளவுட் நைன் தயாரிப்பில் ஜெய்!!!

4th of July 2013
சென்னை::துரை அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஜெய், ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படம் தான், இதுவரை ஜெய் நடித்த படங்களிலேயே அதிகமான பட்ஜெட் படமாகும். இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஐ.டி.வெங்கட் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இது குறித்து கூறிய ஜெய், "தொடர்ந்து சிறந்த தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் பணியாற்றுவதை, அதிஷ்ட்டமாக எண்ணுகிறேன். ஆஸ்கார், போட்டான் கதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, ஏ.ஜி.எஸ் என்று தொடர்ந்து சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் படங்களிலும், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறந்த கதைகளில் பணிபுரிவதை அதிஷ்ட்டமாகவும், நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாகவும் கருதுகிறேன். இந்த நிறுவனங்களைப் போல மற்றொரு சிறந்த நிறுவனமான க்ளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தற்போது ஹீரோவாக ஒப்பந்தமாகியிருப்பது சிறப்பானது." என்று தெரிவித்தார்.

Comments