வெளிநாடுகளில் தீயா வேலை... அம்பிகாபதி வசூல் நிலவரம்!!!

3rd of July 2013
சென்னை::வெளிநாடுகளில் இந்திப் படங்களுக்கு அடுத்து அதிக வசூல் செய்யும் படங்களாக தமிழ் இருந்தது. அந்த இடத்தை கடந்த சில வருடங்களாக தெலுங்குப் படங்கள் கைப்பற்றியிருக்கின்றன. தமிழ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்த வருடம் இந்திக்கு அடுத்த இடத்துக்கு பஞ்சாபி படங்கள் முன்னேறியிருக்கின்றன. யுஎஸ் ஸில் இந்திப் படங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கும் அளவுக்கு பஞ்சாபி படங்களின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது. சரி, தமிழ்ப் படங்களின் நிலை...?
வேறென்ன, ஐயோ பாவம்தான்.
 
யுகே யில் தீயா வேலை செய்யணும் குமாரு மூன்றாவது வார இறுதியில் இரண்டு திரையிடல்களில் 263 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. இதுவரை அதன் யுகே வசூல் 24,415 பவுண்ட்கள். ரூபாயில் 22.11 லட்சங்கள்.
 
ஜாட் அண்ட் ஜுலியட் 2 பஞ்சாபி படம் முதல் வார இறுதியில் 74.94 லட்சங்களை இதே யுகே யில் அனாயாசமாக வசூலித்திருக்கிறது.
 
யுஎஸ் ஸில் ராஞ்சனாவின் தமிழ் பதிப்பான அம்பிகாபதி முதல் மூன்று தினங்களில் 11 திரையிடல்களில் 2.11 லட்சங்களை வசூலித்துள்ளது. நாம் மேலே குறிப்பிட்ட ஜாட் அண்ட் ஜுலியட் 2 பஞ்சாபி படம், அதே மூன்று தினங்களில் 2.31 கோடிகளை வசூலித்துள்ளது.
 
பஞ்சாபி படங்களின் அசுர வளர்ச்சிக்கு இதுவொரு சின்ன சாம்பிள்.

Comments