தெலுங்கு திரையுலகம் என் வீடு – பிரபுதேவா பேச்சு!!!

3rd of July 2013
சென்னை::தமிழ்ப் படங்களில் நடன இயக்குனராக அறிமுகமாகி, ‘காதலன்’ படம் மூலம் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றவர் பிரபுதேவா.
பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும் நடனம் அமைத்து தெலுங்கில் சித்தார்த், த்ரிஷா நடித்த ‘நூ ஒஸ்தாவன்டே நேனு ஒத்தன்டானா’ படம் மூலம் இயக்குனராகவும் ஆனார்.
 
தமிழில்
விஜய்யை வைத்து ‘போக்கிரி’ என்ற வெற்றிப் படத்தையும்,
‘வில்லு’ என்ற தோல்விப் படத்தையும் இயக்கியவர். தொடர்ந்து தமிழில் இவர் இயக்கிய ‘எங்கேயும் காதல்’, ‘வெடி’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்ததால், பாலிவுட் பக்கம் சென்றார்.
 
ஹிந்தியில் இவர் இயக்கிய ‘வான்டட்’, ‘ரவுடி ரத்தோர்’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஹிந்தித் திரையுலகில்  அனைவரும் விரும்பும் இயக்குனராக மாறிவிட்டார்.
 
தற்போது அவர் இயக்கி வரும் ‘ராமய்யா ஒஸ்தாவைய்யா’ படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது, பிரபுதேவா பேசியதாவது,
 
தெலுங்கு திரையுலகம் என் மனதிற்கு நெருக்கமானது. ஏனென்றால், நான் இப்போது பாலிவுட்டில் இருக்கும் நிலைக்கு காரணம் தெலுங்கு திரையுலகம்தான். எல்லாம் இங்குதான் ஆரம்பமானது, அதனால் தெலுங்கு திரையுலகமும் ஹைதராபாத்தையும் என் வீடு போன்று உணர்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
 
சென்னைக்கு வந்தால் “எனக்கு சோறு போட்டது சென்னைதான்” என்று பேசுவாரோ ?
 
பிழைக்கத் தெரிந்தவர்தான் பிரபுதேவா…..

Comments