ஐ படத்துக்காக 85 வயது முதியவர் வேடத்தில் விக்ரம்!!!

5th of July 2013
சென்னை::'ஐ' படத்திற்காக 85 வயது முதியவர் வேடம் ஏற்றிருக்கிறார் விக்ரம்.
நண்பன் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் திரைப்படம் ஐ. இதில் விக்ரம் ஹீரோவாக நடிப்பதும் எமி ஜாக்ஸன் ஹீரோயின் என்பதும் உங்களுக்குத் தெரியும். காமெடிக்கு சந்தானம், ஆக்சனுக்கு சுரேஷ் கோபி என்று மேலும் சிலரை சேர்த்திருக்கிறார்கள்.

முதல்முறையாக பி.சி.ஸ்ரீராம்-ஷங்கருடன் இணைந்து ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு. இந்தமுறை முழுமையாக வெளிநாட்டு திறமைகளுடன் ஷங்கர் களமிறங்கியிருக்கிறார். காஸ்ட்யூம் டிசைனர் கூட  ஹாலிவுட் ஆள்தான்! அதேபோல் சண்டைப் பயிற்சி. அனல் அரசுடன் சைனாவின் பீட்டர் மிங்கும் இணைந்து பணிபுரிகிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்நிலையில் ஐ படம் குறித்து இதுவரை வெளிவராத முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது படத்தில் விக்ரம் 85 வயது முதியவர் வேடம் ஏற்று நடிக்க இருக்கிறாராம். அதுவும் 85 வயது முதியவர் வேடத்துக்கு உடம்பு மட்டும் வெயிட் ஏறி ஜிம் பாய் மாதிரி இருக்க வேண்டும் என்று கூறி விட்டாராம் ஷங்கர். இதற்காக ஜிம்மே கதியென்று கிடக்கும் விக்ரம் ஜிம்மை விட்டால் வீடு, வீட்டை விட்டால் ஜிம் என்று கடந்த 3 மாதங்களாக தனது கெட்டப்பை படு சீக்ரெட்டாக வைத்து வருகிறார்.

அத்துடன் விக்ரமை பொது நிகழ்சிகள் எதிலும் தலை காட்டக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறி விட்டாராம் ஷங்கர். இதனால்தான் விக்ரம் கடந்த 2 மாதங்களாக எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.

Comments