தீபாவளிக்கு வெளியாகிறது கோச்சடையான்!!!

Monday,11th of June 2013
சென்னை::கோச்சடையான் திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
 
ரஜினி படங்கள் என்றால் எதிர்பார்ப்புக்கு சொல்லவே வேண்டாம். அந்த மாதிரி ஒரு எதிர்பார்ப்பு கோச்சடையான் படத்துக்கு ஆரம்பித்ததிலிருந்தே இருந்து வருகிறது. படம் குறித்து நாள்தோறும் புதிது புதிதான தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதலில் கோச்சடையான் திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட முடிவு செய்ததாம் படக்குழு. பின்னர் ஆகஸ்டை விட தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வந்தால் பொருத்தமா இருக்குமேன்னு நினைத்து இப்போது படத்தை தீபாவளிக்கு கொண்டுவர தயாராகி வருகிறார்களாம்.
 
தற்போது 'கோச்சடையான்' படத்தோட எல்லா டெக்னிக்கல் வேலைகளும் முடிஞ்சிட்டதால இப்போ அந்தப்படத்தை பப்ளிசிட்டி பண்ற வேலையை ஆரம்பிச்சிருக்கார் இயக்குனர் செளந்தர்யா. படத்தோட டீஸர், 'மேக்கிங் ஆஃப் கோச்சடையான்', டிரெய்லர், பாடல்கள் உருவான விதம் அதுமட்டுமில்லாம ‘கோச்சடையான் செல்போன்’ என இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு ஒரு பெரிய தொகையை விளம்பரத்திற்கு ஒதுக்கியிருக்கிறதாம் ஈராஸ் படக்கம்பெனி.
 
இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே முதன்முறையாக நடிக்கிறார். இவர்களுடன் சரத்குமார், ஆதி மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

Comments