கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

22nd of June 2013
சென்னை::கேக் செய்யும் பாடகி. அனுஷ்கா போன்ற சில நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசுகிறார் பின்னணி பாடகி சின்மயி. ஓய்வு நேரத்திலோ அல்லது டென்ஷனை குறைக்க வேண்டுமென்றாலோ உடனே சமையல் அறைக்கு சென்றுவிடுகிறார். ருசியான கேக் தயாரித்து அதை தோழிகளுக்கு அனுப்பி வைப்பார். இப்படி சாப்பிட்ட திரையுலகினர் பலர் அவருக்கு போனிலும், டுவிட்டரிலும் வாழ்த்து சொல்கிறார்களாம்.

டிஜிட்டலே போதும்

பெரும்பாலான இயக்குனர்கள் பிலிம் ரோலில் படம் எடுப்பதை கைவிட்டு டிஜிட்டலில் படம் எடுக்கின்றனர். கரு.பழனியப்பன் போன்ற ஒருசிலர் மட்டும் இன்னும் பிலிம்ரோலில் படம் எடுக்கிறார்கள். டிஜிட்டலில் தரமாக உருவாகும் படங்களை பார்த்து பிலிம் ரோலில் படம் எடுப்பவர்களும் டிஜிட்டலுக்கு மாறி வருகின்றனர். பிலிம் ரோலில் வைத்து இயக்கி வரும் கரு.பழனியப்பனும் அடுத்தடுத்து இயக்கும் படங்களை டிஜிட்டலில் இயக்க முடிவு செய்திருக்கிறார்.

ஜிம்மிற்கு போகும் கிரிஷ்

நடிகை சங்கீதாவின் கணவரும், பாடகருமான கிரிஷ் நடிகராகி இருக்கிறார். அதற்கேற்ப தனது உடற்கட்டை தயார்படுத்திக்கொள்ள தினமும் ஜிம்மிற்கு செல்ல தொடங்கி விட்டார். மணிக்கணக்கில்  ஜிம்மில் கடுமையாக பயிற்சி செய்கிறார். புதிய தோற்றத்தை படம் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதைப்பார்த்து பலர் லைக் தெரிவித்திருக்கிறார்களாம்.  

ரசிகர் போனில் பாடிய அனிரூத்

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்னையில் பிரபல வர்த்தக வளாகத்துக்கு சென்றார் அனிரூத். அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு ஆட்டோகிராப் வாங்கினர். ஒரு ரசிகர் செல்போனை அவரது வாய் அருகே நீட்டி, ‘ஒரு பாட்டு பாடுங்க அப்படியே பதிவு செஞ்சிக்கிறேன்னு சொன்னாராம். பொது இடத்தில் இப்படி கேட்கிறாரே என்று விலகிச் செல்லாமல் செல்போனில் ஒரு சில வரிகள் பாடி கொடுத்து பதிவு செய்துகொள்ளச் சொன்ன£ராம் அனி.
பேரை கெடுக்கமாட்டேன்

மும்பையில் தனது உறவுக்காரரின் காதலியை கடத்தியதாக சனா கான் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதில் தலைமறைவானதால் சல்மான் கானுடன் நடிக்கும் ‘மென்டல்’ பட ஷூட்டிங்கில் அவரால் பங்கேற்க முடியாவில்லை. இதையடுத்து, கோர்ட்டில் ஆஜரானார் சனா. இதுபற்றி அவர் கூறும்போது, ‘கடத்தல் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. இப்போதுதான் இந்தி படத்தில் அறிமுகமாக உள்ளேன். என் பெயரை நானே கெடுத்துக்கொள்ளும் செயல்களில் ஈடுபட மாட்டேன்’ என்றார்.

பட்டு சேலை காத்தாட

தனுஷ் நடிப்பில் இந்தியில் உருவான ‘ராஞ்சனா’ தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. இதன் நாயகி சோனம் கபூர் சென்னை வந்தார். ஸ்டார் ஓட்டலில் நிருபர்கள் காத்திருந்தனர். நேரம் கடந்து அறைக்குள் நுழைந்தாலும் ஜரிகை பார்டருடன் ஆரஞ்சு கலர் பட்டு சேலை அணிந்து ஒயிலாக வந்து அசத்தினார். தனுஷ் பட்டு சட்டை, பட்டு வேட்டியில் வந்தார். ‘எதுவும் விசேஷமா?’ என்று கேட்டதற்கு, ‘நான் தமிழன். வேட்டி கட்டலைன்னாதான் ஏன்னு கேக்கணும். கட்டினா ஏன்னு கேக்க கூடாது’ என்றார் தனுஷ் சிரித்தபடி.

4 மணி நேர மேக்கப்

‘எந்திரன்’ ரஜினி, ‘இந்தியன்’ கமலுக்கு பல மணி நேரம் செலவிட்டு பிரத்யேக மேக்கப் போடப்பட்டது. அதேபோல ‘ஐ’ பட கதாபாத்திரத்துக்காக விக்ரம் அணியும் மேக்கப்புக்கு தினமும் 4 மணி நேரம் செலவிடப்படுகிறதாம். இப்படத்தில் 3 வித கெட்டப்புக்காக உடல் தோற்றத்தை மெலிய வைக்க 25 கிலோ எடை குறைத்திருக்கிறார் விக்ரம்.

இந்தியில் லாரன்ஸ்

பிரபுதேவாவை தொடர்ந்து இந்தி படத்தை இயக்க உள்ளார் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ். அவர் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ (முனி 2) படத்தை இந்தியில் தயாரிக்க சஞ்சய் லீலா பன்சாலி உரிமை பெற்றிருக்கிறார். இதை இயக்க லாரன்ஸ் ஓகே சொல்லி இருக்கிறார்.
சுஸாவை கவர்ந்த ஹீரோ

‘எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனின் பிளாஷ் பேக் காதலியாக நடித்தவர் சுஸா குமார். அடுத்து அஜீத் நடிக்க ‘சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் விதார்த்தின் கேர்ள் பிரண்டாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்தது. அப்போது அஜீத்தை சந்தித்து பேசின£ராம். இதுவரை சந்தித்தவர்களில் மிகவும் இனிமையாகவும், அன்பாகவும் பேசியவர் அஜீத். அவரைத்தான் சந்தித்தேனா என்ற ஆச்சரியத்திலிருந்து இன்னும் சுஸாகுமாரால் மீள முடியவில்லையாம்.

மெயில் வாய்ப்பு

‘ஜெய் ஹிந்த 2ம் பாகம் இயக்குகிறார் அர்ஜுன். இதில் இரண்டு ஹீரோயின்கள் சுர்வீன் சாவ்லா, சார்லட் கிளார். இவர்களில் சுர்வீன், ‘மூன்றுபேர் மூன்று காதல் படத்தில் நடித்தவர். சார்லட் கிளாரை பொறுத்தவரை சீன நடிகைபோல் தோற்றம் உடையவர். ஆனால் அவர் மும்பையை சேர்ந்தவர்தானாம். தந்தை மராட்டியர், தாய் ஆங்கிலோ இந்தியன். மாடலாக வலம் வந்துக்கொண்டிருந்த சார்லட் தனது பயோ டேட்டாவை சில பட கம்பெனிகளுக்கு மெயில் செய்தார். அதில் கிடைத்ததுதான் அர்ஜுன் பட வாய்ப்பாம்.

ரஜினி வீட்டில் தியேட்டர்

ரஜினிக்கு முன்பெல்லாம் படங்களின் சிறப்பு காட்சி ப்ரிவியூ தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இப்போது அந்த அவசியம் கிடையாது. வீட்டிலேயே டால்பி எஃபக்டுடன் ஹோம் தியேட்டர் அமைத்துவிட்டார். எந்த படத்தையும் அவர் இனி இதில் பார்த்துக்கொள்ள முடியும். ஹோம் தியேட்டர் என்பதால் தியேட்டரில் பார்த்த திருப்தி கிடைத்துவிடும¢ என்கிறார் ரஜினி.

கேரக்டர் மாதவன்

ஹீரோ வேடத்துக்காக காத்திருந்து எந்த பயனும் இல்லாததால் விரக்தி அடைந்துள்ளார் மாதவன். பாலிவுட்டிலும் வாய்ப்புகள் இல்லை. இனி எந்த மொழியில் எந்த வேடமாக இருந்தாலும் ஏற்பது என முடிவு செய்திருக்கிறார். சில சீனியர் ஹீரோக்கள் இப்போது கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிவிட்டனர். அந்த பாணியில் தன்னையும் மாற்றிக்கொள்ள மாதவன் தயாராகிவிட்டாராம்.

Comments