கங்காரு’ படத்திற்கு கொடைக்கானலில் பிரம்மாண்ட அரங்கம்!!!

12th of June 2013
சென்னை::மணிவண்ணன் இயக்கிய நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ படத்தினைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் கங்காரு.
 
இந்தப் படத்தில் புதுமுக நாயகன் அர்ஜுனா,  நாயகிகள் வர்ஷா, பிரியங்கா ஆகியோருடன் தம்பி ராமையா, கலாபவன்மணி, கஞ்சா கருப்பு,  மற்றும் பல புதிய முகங்களும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் புதுமுக நாயகன் அர்ஜுனா,  நாயகிகள் வர்ஷா, பிரியங்கா ஆகியோருடன் தம்பி ராமையா, கலாபவன்மணி, கஞ்சா கருப்பு,  மற்றும் பலபுதிய முகங்களும் நடிக்கின்றனர்.
தனது உதவியாளர் எஸ் டி சாயின் கதைக்கு திரைக்கதை, வசனம்,  எழுதி இயக்குகிறார் சாமி. அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். பாடகர் ஸ்ரீநிவாஸ் தமிழில் இசையமைக்கும் முதல் படம் இது.  
 
முப்பத்தைந்து படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்த ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார். கலையை தோட்டாதரணி கவனிக்கிறார்.
நிர்வாகத் தயாரிப்பு -பி. பாஸ்கர்ராஜ். தயாரிப்பு நிர்வாகம் -  நமஸ்காரம் சரவணன், தயாரிப்பு - சுரேஷ் காமாட்சி.
தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டாதரணி. மிகவும் சவாலான மற்றும் பிரமாண்டமான அரங்குகளை அமைப்பதில் வல்லவர். இயக்குனர் ஷங்கரின் படங்களில் தோட்டாதரணியின் பிரமாண்டமான அரங்குகள் ரசிகர்களைப் பிரமிக்க வைக்கும்.
 
இதைப் பற்றி இயக்குனர் சாமி கூறும் போது,  “தோட்டாதரணி சார் கொடைக்கானலின் உச்சியில் இருக்கும் அப்ஸர்வேட் பகுதியில்  பிரமாண்டமான தெரு ஒன்றை  உருவாக்கியுள்ளார். முழு கொடைக்கானலே தெரியும் அளவிற்கு அந்த தெரு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் கொடைக்கானலில் இப்படியொரு வடிவமைப்பு நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான். படத்திற்கு இந்த தெரு மிக முக்கியமாகும்  என்பதால் மேடு பள்ளங்களுள்ள  மலைப்பிரதேசத்தில் வெகு சிரத்தையெடுத்து அமைத்துள்ளார் தோட்டாதரணி.   அந்த தெருவில்  இருந்து பார்த்தால் கொடைக்கானலில் உள்ள அனைத்து முக்கியமான இடங்களையும் பார்த்து மகிழலாம்.
 
அதுவுமில்லாமல் மற்றொரு சிறப்பாக,  2 நிமிடம் ஓடும் கங்காரு படத்தின் டைட்டில் காட்சி முழுவதும் தோட்டாதரணியால் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளின் மாதிரிகளால்  படமாக்கவுள்ளோம். டைட்டில் காட்சியே ரசிகர்களுக்குப் புது அனுபவத்தைக் கொடுக்கும்,” என்றார்.

Comments