“உ” திரைப்படத்தின் இசைவெளியீடு!!!

28th of June 2013
சென்னை::இந்த விஸ்காம் பசங்க தொல்லைத் தாங்கமுடியல… நல்லாத்தான் பண்றாய்ங்க… என்ன நம்ம ஈகோ தான் அதை ஏத்துக்கமாட்டேங்குது..”என்கிற தம்பிராமையாவின் அளப்பறையான பின்னணி குரலோடு திரையிடப்பட்ட உ படத்தின் டிரையல் அரங்கை ஒரு நிமிடம் அதிர வைத்தது என்றால் அது மிகையல்ல. அரங்கில் நிறைந்திருந்த நாளைய இயக்குனர்களின் பலத்த கரகோஷத்தோடு அறிமுக இயக்குனர் ஆஷிக் இயக்கியிருக்கும் உ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அரங்கின் வெளியே நிஜமழையென்றால், அரங்கின் உள்ளே அறிமுக இசையமைப்பாளர் அபிஜித் ராமாசாமியின் இசையில் உருவான உ படத்தின் இசைமழை. உ படத்தின் பாடலாசிரியர் முருகன் மந்திரத்தைத் தவிர இயக்குனர் ஆஷிக், ஒளிப்பதிவாளர் என்.ஜெயபிரகாஷ் உள்ளிட்ட அனைவருமே 23 வயதுக்குக் கீழ் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் விக்ரமன் உ படத்தின் பாடல்களை வெளியிட யூடிவி தனஞ்செயன் பெற்றுக்கொண்டார். தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலு ஆகியோர் கலந்து கொண்டு உ குழுவினரை வாழ்த்தினர். பாடல்களையும் டிரையலரையும் பார்த்த தனஞ்செயன், விக்ரமன், எஸ்.எஸ்.குமரன், பி.எல்.தேனப்பன் ஆகியோர் இந்தப் படம் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தக்காணோம் , சூது கவ்வும் மற்றும் நேரம் ஆகிய படங்களைப் போல இளைஞர்களைக் கவரும் என்றார்கள். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர்- நடிகர் தம்பிராமையா, “சரி…கேட்டுத்தான் பார்ப்போமே என்று தான் கதை கேட்க ஆரம்பித்தேன்…சும்மா சொல்லக்கூடாது பயல்கள் மிரட்டியிருக்கிறார்கள்… என்னைப் பாடவைத்து ஆடவைத்து அமர்க்களப் படுத்தி விட்டார்கள்” என்றார்.
பத்து வருடங்களுக்கு முன்பு சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்கிற வேட்கையோடு சென்னைக்கு வந்து… குடும்பம் குட்டி என்று ஆகி வாழ்வாதாரத்திற்கே ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும்… சினிமா பத்திரிக்கையாளராகவே எனது பயணம் இருந்ததால் சினிமாவுக்குள்ளேயே இருக்கமுடிந்தது… இன்று பாடலாசிரியராக இந்த மேடையில் நிற்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது…அதுவும் எனது பாடல்களைப் பாடி தேசிய விருது பெற்ற தம்பிராமையாவும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டம் வென்ற ஆஜித்தும் திரைப்படப் பாடகர்களாக அறிமுகமாகியிருக்கிறார் என்பதும் எனக்கு பெருமையாக உள்ளது… படம் முழுமை பெற உதவிய அனைவருக்கும் நன்றி..” என்று பேசினார் பத்திரிக்கையாளராக இருந்து பாடலாசிரியராக அவதாரம் எடுத்திருக்கும் முருகன் மந்திரம்.
முன்னதாகப் பேசிய எஸ்.எஸ்.குமரன், “என் படத்தில் உதவி இயக்குனராகத் தான் வேலைக்குச் சேர்ந்தார் இயக்குனர் ஆஷிக்… சூட்டிங்கிற்கு லொகேஷன் பார்க்கப் போனபோதே காணாமல் போய்விட்டார்… அப்புறம் என் படம் முடிந்து ஒரு நாள் அவரைத் தொடர்பு கொண்டால் அவரது படத்தையும் முடித்து விட்டு வந்து நிற்கிறார்… அவரு மட்டுமல்ல என் அணியில் இருந்து நிறையப் பேரை இழுத்துக் கொண்டார்… பராவியில்லை என்னுடடன் பணியாற்றியிருந்தால் இந்த நேரத்தில் அவரால் படம் இயக்கி முடித்திருக்க முடியாது.. வாழ்த்துகள்..” என்று மிகவும் பெருந்தன்மையுடன் வாழ்த்தினார்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டம் வென்ற ஆஜித் அவருக்கு ஜோடியாக மதுமிதா என்கிற பேரழகுச் சிறுமி ஆகியோர் உட்பட ஸ்மைல் செல்வா, மதன்கோபால், சத்யா, கார்த்திக், தீபராஜ், வருண் கதா நாயகியாக நேகா, காளி, சக்கரவர்த்தி செல்வன், வெங்கி மற்றும் நெல்லை சிவா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள் பயில்வான் ரங்கநாதன் மற்றும் தேவராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். -“இந்த விஸ்காம் பசங்க தொல்லைத் தாங்கமுடியல… நல்லாத்தான் பண்றாய்ங்க… என்ன நம்ம ஈகோ தான் அதை ஏத்துக்கமாட்டேங்குது..”என்கிற தம்பிராமையாவின் அளப்பறையான பின்னணி குரலோடு திரையிடப்பட்ட உ படத்தின் டிரையல் அரங்கை ஒரு நிமிடம் அதிர வைத்தது என்றால் அது மிகையல்ல. அரங்கில் நிறைந்திருந்த நாளைய இயக்குனர்களின் பலத்த கரகோஷத்தோடு அறிமுக இயக்குனர் ஆஷிக் இயக்கியிருக்கும் உ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அரங்கின் வெளியே நிஜமழையென்றால், அரங்கின் உள்ளே அறிமுக இசையமைப்பாளர் அபிஜித் ராமாசாமியின் இசையில் உருவான உ படத்தின் இசைமழை. உ படத்தின் பாடலாசிரியர் முருகன் மந்திரத்தைத் தவிர இயக்குனர் ஆஷிக், ஒளிப்பதிவாளர் என்.ஜெயபிரகாஷ் உள்ளிட்ட அனைவருமே 23 வயதுக்குக் கீழ் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டம் வென்ற ஆஜித் அவருக்கு ஜோடியாக மதுமிதா என்கிற பேரழகுச் சிறுமி ஆகியோர் உட்பட ஸ்மைல் செல்வா, மதன்கோபால், சத்யா, கார்த்திக், தீபராஜ், வருண் கதா நாயகியாக நேகா, காளி, சக்கரவர்த்தி செல்வன், வெங்கி மற்றும் நெல்லை சிவா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள் பயில்வான் ரங்கநாதன் மற்றும் தேவராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

Comments