'நூறாம் நாள்' படத்திற்காக மகனையே எதிர்த்த ஜாக்குவார் தங்கம்!!!

19th of June 2013
சென்னை::தமிழ் சினிமாவில் பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநராக உள்ள ஜாக்குவார் தங்கம், 'நூறாம் நாள்' படத்திற்காக தனது மகனும், நூறாம் நாள் படத்தின் ஹீரோவும் ஆன, விஜய சிரஞ்சீவியுடன் பயங்கர மோதலில் ஈடுபட்டார்.

மோதல் என்றதும் நிஜ மோதல் என்று நினைத்து விட வேண்டாம். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்தப் படமாக உருவாகுன் 'நூறாம் நாள்' படத்தில் ஜாக்குவார் தங்கத்தின் மகன், விஜய சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க, அவருடைய அப்பாவான ஜாக்குவார் தங்கம் கராத்தே மாஸ்டராக நடிக்கிறார்.

அப்பா - மகன் நேருக்கு நேர் மோதும் அதிரடி ஆக்ஷன் காட்சி ஒன்றை இப்படத்திற்காக படமாக்கியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் ராஜா தேசிங்கு.

ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஜய சிரஞ்சீவி, சைக்கோ கதாபாத்திரத்தில் நடிக்கிறர். தன் நண்பனை யாராவது தவறாகப் பேசினால் கூட கொலை செய்துவிடும் சைக்கோவாக அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஒரு குடும்பத்தையே கண் இமைக்கும் நேரத்த்யில் கொலை செய்து விடுகிறார். அவர் எதற்காகக் கொலை செய்கிறார், பின்னணி காரணம் என்ன என்பதை மிகவும் திக்திக் நிமிடங்களுடன் படமாக்கியுள்ளார் இயக்குநர் ராஜா தேசிங்கு.

இந்த படத்தில் ஹீரோ அறிமுகமாகும் காட்சியில் 500க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்களைப் பயன்படுத்தி மிக பிரமாண்டமான முறையில் படமாக்கியிருக்கிறார்கள். இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்டெடி குச்சியையும் (சிலம்பம்) டிரிபிள் நுன்ஜாக்கையும் பயன்படுத்தி சண்டைக் காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள்.

ஜாக்குவார் தங்கம் சிலம்பம் சுற்றுவதில் கைதேர்ந்தெவர் என்பது தமிழ் திரையுலகமே அறிந்தது. அதுபோல் அவர் மகன், விஜய சிரஞ்சீவி நுன்ஜாக் சுற்றுவதில் வல்லவர். அதுவும் டிரிபில் நுன்ஜாக் சுற்றுவதில் இந்தியாவில் அவருக்கு நிகர் அவரே என்றும் சொல்கிறார்கள். முறைப்படி கராத்தே, சிலம்பம் என்று அனைத்து கலைகளையும் அறிந்து வைத்திருக்கும் விஜய சிரஞ்சீவியின் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிறார் இயக்குநர் ராஜா தேசிங்கு.

அதேபோல, இப்படத்தில் அப்பா - மகனுக்கு இடையே நடைபெறும் மோஹ்டல் காட்சி, 500 கராத்தே வீரர்களுக்கு மத்தியில், சுமார் 7 நாட்கள் வேலூர் அருகே படமாக்கப்பட்டுள்ளது. படம் பார்ப்பவர்களுக்கு ஆங்கிலப் படங்களுக்கு நிகரான ஓர் ஆக்ஷன் விருந்தை விரைவில் தரப்போக தயாராகிக்கொண்டிருக்கிறது 'நூறாம் நாள்'.

இந்த சண்டைக் காட்சியைப் பற்றி ஹீரோ விஜய சிரஞ்சீவி கூறுகையில், "இயக்குநர் கதை சொல்லி முடித்ததும், இதில் நடிக்க வேண்டும் எண்ணம் வந்துவிட்டது. ஏனேனில் நண்பனுக்காக நண்பன் என்ற ரீதியில் நட்பை வெகு அழகாகச் சொல்லும் ஒரே தி

கதாநாயகனாக விஜய சிரஞ்சீவி நடிக்க, அவருக்கு ஜோடியா சாய்னா நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகனாக தோனி நடிக்கிறார். இவர்களுடன் மிருதுளா, நிவேதாஸ்ரீ, பாண்டியராஜன், கோவை சரளா, காதல் சுகுமார், போஸ் வெங்கட், ஜாக்குவார் தங்கம், ராஜேந்திரநாத், மீரா கிருஷ்ணன், அருண் சின்னையா, நந்தினி, மைனா நாகு ஆகியோர் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி ராஜா தேசிங்கு இயக்குகிறார். ராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு முராள் இசையமைக்கிறார். எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்ய, ஜாக்குவார் தங்கம் சண்டைப் பயிற்சி அளிக்கிறார். ராஜன் கலைவண்ணத்தில், ரவிதேவ், ராஜ்விமல், முருகேஷ் ஆகியோர் நடனம் அமைக்கிறார்கள். சிவசங்கர் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில் இ.பாலசுப்பிரமணி, ஜி.ஆர்.உஷா ரவி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். உ.பி.ரவிசந்திரன், ஏ.பி.நவீன் பாலார் ஆகியோர் இணை தயாரிப்பை மேற்கொள்கின்றனர்.

அதிரடி சண்டைக் காட்சிகளும், கொலைகளும் நிறைந்த க்ரைம் படமாக ராஜா தேசிங்கு இயக்கத்தில் 'நூறாம் நாள்' படம் தயாராகி வருகிறது.
 
ரைப்படம் இது தான் என்று எனக்குத் தோன்றியது. அத்துடன் ஹீரோ அறிமுகமாகும் சண்டைக் காட்சியில் உங்களுடன் நடிக்கப் போவதும் உங்கள் தந்தை ஜாக்குவார் தங்கம்தான் என்று இயக்குநர் கூறியதும், எனக்குள் ஒரு படபடப்பு வந்தது. அதுவும் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான டிரிபிள் நின்ஜாக்கும் ஸ்டெடி குச்சியையும் பயன்படுத்தி சண்டை என்றதும் சற்று யோசித்தேன், என் தந்தை சம்மதம் தெரிவித்த பிறகே நானும் சம்மதித்தேன். இரண்டு விதமான சண்டைகள் ஒரே சண்டைக் காட்சியில் வரும். அப்பாவுடன் சண்டை போட பிரத்யேகப் பயிற்சி பெற்றேன்.

Comments