இளம் ஹீரோக்களுக்கு மட்டும்தான் கால்ஷீட்: காஜல் அகர்வால் திடீர் நிபந்தனை!!!

28th of June 2013
சென்னை::இளம் ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்றார் காஜல் அகர்வால். சமீபத்தில் தனது 28வது பிறந்த நாளை கொண்டாடினார் காஜல் அகர்வால். முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜலுடன் ஜோடி போட பல ஹீரோக்கள் தயாராக உள்ளனர். ஆனால் அவரது விருப்பம் வேறாக உள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது:
 
சினிமாவில் நான் அறிமுகமான தொடக்க காலத் தில் நிறைய புதுமுகங்கள் மற்றும் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தேன். தற்போது தெளிவான ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். இப்போதுள்ள எனது அந்தஸ்த்துக்கு, இனி முன்னணி ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன். அப்படி நடிக்கும் ஹீரோக்கள் டாப் ரேங்கில் மட்டுமல்ல இளமையாகவும் இருக்க வேண்டும். இதுதான் எனது முதல் கண்டிஷன். இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
 
பல முன்னணி ஹீரோயின்கள் இதே கண்டிஷனுடன்தான் கால்ஷீட் தருகின்றனர். ஆனால் காஜல் அகர்வாலைப்போல் வெளிப்படையாக அதை சொல்ல தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள் என இண்டஸ்ட்ரியில் பேசப்படுகிறது.

Comments