அடுத்து ப்ளஸ்-ஒன் படிப்பை தொடரப்போகிறாராம்: லட்சுமிமேனன்!!!

23rd of June 2013
சென்னை::கும்கி படத்துக்கு லட்சுமிமேனனை கேரளாவிலிருந்து பிரபுசாலமன் அழைத்து வந்தபோது அவருக்கு பதினான்கு வயசுதான். ஒன்பதாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தாராம். அந்த படத்தை முடித்து விட்டு சுந்தரபாண்டியனில் நடித்தபோது பத்தாம் வகுப்பு படித்த லட்சுமிமேனன். இப்போது தேர்விலும் பாசாகி விட்டார். இந்த சமயத்தில் அவர் கைவசம் மஞ்சப்பை, சிப்பாய், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, வசந்தகுமாரன் ஆகிய படங்கள் கமிட்டாகியுள்ளன. ஆனபோதும் அவர் அடுத்து ப்ளஸ்-ஒன் படிப்பை தொடரப்போகிறாராம்.
 
சினிமா நல்லதானே போய்க்கிட்டிருக்கு. இனிமே படிப்பை மூட்டை கட்டி வச்சிட்டு, முழுநேர நடிகையாக வேண்டியத்தானே? என்று அவரைக்கேட்டால், இப்போதைக்கு சினிமா வாய்ப்புகள் திருப்தியா இருக்கு. ஆனா அடுத்த வருசம் எப்படி இருக்குமோ சொல்ல முடியாது. அதுவும் நான் கவர்ச்சியெல்லாம் காட்டி நடிக்க மாட்டேன். அதனால் நானெல்லாம் சினிமாவுல ரொம்ப நாள் தாக்குப்பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்.
 
அதனால், இப்போதும் நடித்துக்கொண்டே படிப்பையும் தொடரப்போகிறேன். ஒருவேளை, இரண்டு வருடம் கழித்து எனக்கு படவாய்ப்பு இல்லையென்றால், கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஏதாச்சும் ஆபீஸ்ல போய் வேலை செய்வேன். இப்ப சினிமாவை நம்பி படிப்ப விட்டா, சினிமா வாய்ப்பு இல்லைன்னா படிப்பறிவு இல்லாத நான் வீட்டுலதானே உட்கார்ந்துக்கிட்டு இருக்கனும் என்கிறார் லட்சுமிமேனன்.

Comments