''அரிமா நம்பி''.- ட்ரம்ஸ் சிவமணி இசையமைப்பாளராக பிரமோஷன்!!!

Thursday,6th of June 2013
சென்னை::புதுப்படம் ''அரிமா நம்பி''.- ட்ரம்ஸ் சிவமணி இசையமைப்பாளராக பிரமோஷன்
அரிமா நம்பி திரைப்படத்தின் மூலம் ட்ரம்ஸ் சிவமணி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
 
டிரம்ஸ் சிவமணி என்றால் போதும், அவருடைய ட்ரம்ஸில் இருந்து வரும் ஒலியை அதிர அதிர ரசிப்பார்கள் இசை ரசிகர்கள். இவர், தமிழ் சினிமாவில் அனைத்து இசையமைப்பாளர்களிடம் ட்ரம்ஸ் வாசித்தவர். இதுவரை 5 ஆயிரம் திரைப்பட பாடல்களுக்கு ட்ரம்ஸ் வாசித்திருக்கிற ஆனந்தன் சிவமணி என்கிற சிவா அரிமா நம்பி எனும் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.
 
இந்தப் படத்தை முருகதாஸின் உதவியாளர் ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். துப்பாகி படத்தை தயாரித்த தாணு தயாரிக்கிறார். இதில் விக்ரம் பிரபு நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த்தும் நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் எண்டெர்டெயினராக இருக்கும் என்று சொல்லப்படும் படத்தின் மியூசிக் பொறுப்பைதான் சிவமணி’ ஏற்றுள்ளார். உண்மையில் இப்படத்தின் இசைதான் படத்தின் ஹீரோ வாக்கும் என்று இப்போதே கிசுகிசுக்கிறார்கள்!
 
''கும்கி'' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு மூன்று படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

''எங்கேயும் எப்போதும்'' சரவணன் இயக்கத்தில் ''இவன் வேறமாதிரி'', ''சிகரம் தொடு'' படங்களை தொடர்ந்து மூன்றாவதாக விக்ரம் பிரபு கமிட் ஆகியிருக்கும் புதுப்படம் ''அரிமா நம்பி''.

படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அசோசியேட் இயக்குனர் ஆனந்த சங்கர் இயக்க, ''துப்பாக்கி'' படத்திற்கு பிறகு ''அரிமா நம்பி''யை தயாரிக்கிறார் கலைப்புலி தாணு.

படத்தில் விக்ரம் பிரபுவோடு டூயட் ஆடப்போவது எதிர்நீச்சலில் ஹாட் ஜில் ஹிட் கொடுத்த பிரியா ஆனந்த. கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ட்ரம்ஸ் சிவமணி இசையமைப்பாளராக இந்த படத்தில் பிரமோஷன் ஆகியிருக்கிறார்.
 

Comments