சூர்யாவுடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை: த்ரிஷா மறுப்பு!!!

28th of June 2013
சென்னை::சூர்யாவுடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றார் த்ரிஷா.கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் துருவ நட்சத்திரம். இதில் சூர்யா ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார்.
 
இது குறித்து டுவிட்டரில் த்ரிஷா கூறும்போது, இப்போதைக்கு நடித்து வரும் படங்களில் பிசியாக இருக்கிறேன். புது படங்கள் ஏற்கும் எண்ணம் இல்லை. காரணம், கால்ஷீட் இல்லாததுதான். இதற்கிடையே கவுதம் மேனன் பேசியதாகவும் அவரது படத்தில் நான் நடிப்பதாகவும் தகவல் வருகிறது. சூர்யாவுடன் இப்போது நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
 
ஆனால் அவருடன் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன். கால்ஷீட் ஒத்துவரும் நேரத்தில் அதற்கான வாய்ப்பு அமைந்தால் உடனே நடிக்க ஒப்புக்கொள்வேன் என்றார்.

Comments