எம்.ஜி.ஆர்.,சிவாஜிக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் வடிவேலுவுக்கும் எழுதுகிறார்!!!

Sunday, June 16, 2013
சென்னை::இரண்டாவது இன்னிங்சில் என்ட்ரி ஆனால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஆறு மாதமாக அடம் பிடித்துக்கொண்டிருந்த வடிவேலு, ஒரு வழியாக கஜபுஜகஜ தெனாலிராமன் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஏற்கனவே நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி பட பாணியில் வரலாற்று கதையம்சம் கொண்ட படம் என்பதால் மன்னர் கெட்டப்பில் காணப்படுகிறார் வடிவேலு. சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பிற்கு தலைமுறை கண்ட ஆரூர்தாசும் விசிட் அடித்து வடிவேலுவின் வசன உச்சரிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

இவர் ஏன் வடிவேலு பேசுவதை கவனிக்க வேண்டும் என்கிறீர்களா? இந்த தெனாலிராமன் படத்தை இயக்குவது யுவராஜ் என்றாலும், படத்துக்கு வசனம் எழுதியிருப்பது ஆரூர்தாஸ் தான். எம்.ஜி.ஆர்,. சிவாஜி, ஜெமினிகணேசன் போன்ற காலஞ்சென்ற முன்னணி நடிகர்களுக்கெல்லாம் வசனம் எழுதிய இவர், இப்போது வடிவேலுவுக்கும் எழுதியிருக்கிறார்.

இதனால், வழக்கமாக தான் நடிக்கும் படங்களில் டைரக்டர்கள் ஒரு டயலாக் பேப்பரை கொடுத்தால், அவற்றை முழுக்க முழுக்க தனது பாணிக்கே மாற்றி விடும் வடிவேலு, இந்த படத்தைப்பொறுத்தவரை டயலாக்கை மாற்றுவதற்கு ரொம்பவே பயப்படுகிறாராம். அப்படியே மாற்ற வேண்டும் என்று நினைத்தால், வசனகர்த்தா ஆரூர்தாஸிடமே சென்று தனது கருத்தை அவர் முன் வைக்கிறாராம். அவரும், அப்படியா இதோ மாற்றித்தருகிறேன் என்று ஸ்பாட்டிலேயே மாற்று டயலாக்கை சுடச்சுட எழுதி தருகிறாராம். இதனால் என்ன இருந்தாலும் சீனியர் சீனியர் தான் என்று அந்த டயலாக்குகளை வாங்கி பெருமையோடு பேசி நடித்துக்கொண்டிருக்கிறார் வடிவேலு.

Comments