சூர்யாவின் சிங்கம் 2- ஜூலை 5-ம் தேதி உலகமெங்கும் ரிலீஸ்!!!

24th of June 2013
சென்னை::சூர்யா நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் சிங்கம் 2 படம் வரும் ஜூலை 5-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
 
ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் சிங்கம் 2 என்ற பெயரிலேயே உருவாகி வந்தது. இதில் சூர்யா - அனுஷ்கா ஜோடியுடன், ஹன்சிகா, விவேக், சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் படபிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி தென் ஆப்ரிக்கா வரை நடந்தது. சமீபத்தில் பாடல்கள் வெளியிடப்பட்டன.

.சிங்கம் படம் உள்ளூர் அரசியல் வாதிகள் மற்றும் ரவுடிகள் பற்றி சொன்னது. அதன் இறுதியில் சர்வதேச டான்கள் பற்றிய ஒரு குறிப்போடு முடிக்கப்பட்டிருந்தது.

சிங்கம் 2 படத்தில் சர்வதேச தாதாக்களுடன் சூர்யா மோதுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஹன்சிகா பள்ளி மாணவியாக வருகிறார்

. இப்படம் தமிழகத்திலும் கேரளாவிலும் தமிழிலேயே வெளியாகிறது. யாமுடு 2 என்ற பெயரில், தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.

பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது அனைத்து மொழிகளிலும், வெளிநாடுகளிலும்.

Comments