இன்னும் தீரலை அரசியல் அலர்‌ஜி!!!

Wednesday,29th of May 2013
சென்னை::ஏறக்குறைய இரண்டு வருட வனவாசத்துக்குப் பிறகு மீண்டும் வடிவேலு. யுவராஜா இயக்கும் ச‌ரித்திர படம். ஆனால் காமெடிதான் பிரதானம்.
அரசியலுக்கு போய் முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்ட வலி இன்னமும் இருக்கிறது வடிவேலிடம்.
 
கேமராவுக்கு முன்னால் நிற்பதற்கு முன் வசனங்களை வாங்கி இது யாரையாவது கேலி செய்வது போல் இருக்குமா என எட்டு திசையிலும் சிந்தனையை ஓடவிட்டுதான் வசனங்களை ஓகே செய்கிறார். அப்படி முழு நீள படமும் அரசியல் இடை நீக்கத்துடன்தான் உருவாகி வருகிறது.
 
வடிவேலு படம் வெளிவந்தால் ஆனவரைக்கும் ஓடவிட மாட்டோம் என ஆர்மிக்கார‌ரின் முரட்டு தொண்டர்கள் சிலர் வீராவேசம் கொண்டிருக்கிறார்கள். இதுவும் காமெடி புயலை கொஞ்சம் கலங்கடித்திருக்கிறது.
எப்படியும் வடிவேலின் இரண்டாவது இன்னிங்ஸ் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

Comments